நாமக்கல் நரசிம்மசாமி கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி பக்தர்கள் மொய் சமர்பித்து தரிசனம்!

நாளை திங்கட்கிழமை குதிரை வாகனம் திருவேடுபரி உற்சவமும். மார்ச் 26–ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும், மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஆஞ்சநேயர் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
நாமக்கல்லில் நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும். நடப்பாண்டு மார்ச் 18-ம் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி, அன்ன, சிம்ம, அனுமந்த, கருட, சேஷ, யானை வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று (மார்ச் 24)இரவு நரசிம்மர், அரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாணம், நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மொய் பணம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும், விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடந்தன. நாளை திங்கட்கிழமை மார்ச், 25ம் தேதி குதிரை வாகனம் திருவேடுபரி உற்சவமும். நாளை மறுநாள் மார்ச் 26–ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும், மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஆஞ்சநேயர் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏப்ரல்.1–ஆம் தேதி ஊஞ்சல் உற்சவ சேவையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ராம ஸ்ரீனிவாசன், ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் திருக்கோயில் அலுவலர்கள்/ பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story