நத்தம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப பெருவிழா

நத்தம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப பெருவிழா

திருப்பலி

திண்டுக்கல் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருக்குடும்ப பெருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் பாலன் இயேசுவின் அன்பும் சமாதானமும் நம் இறை குடும்பங்களில் தங்கிட திருக்குடும்ப பெருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பங்குதந்தையர்கள் இன்னாசிமுத்து, மரிய பிரான்சிஸ் பிரிட்டோ, மைக்கேல் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடந்தது.இதில்குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள கணவன், மனைவி,பிள்ளைகள் அனைவரும் அவரவருக்குரிய பணிகளை பொறுப்புணர்வுடன் செய்து,ஒருவரை ஒருவர் ஊக்குவித்து அன்புடன் அக்கறை காட்டி இயேசு, மரியா சூசையின் திருகுடும்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

தொடா்ந்து, திருமணமாகி 25 மற்றும் 50 ஆண்டுகள் கடந்த தம்பதிகளுக்கு ஆசி வழங்கப்பட்டது. இதில் செந்துறை பங்கைச்சேர்ந்த இறைமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்‌.

Tags

Next Story