திருக்குறள் எழுதும் போட்டி!

விருதுநகரில் தூரமே வானம் என்ற தலைப்பில் மெகா திருக்குறள் எழுதும் போட்டி நடைப்பெற்றது.

விருதுநகர் தனியார் பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்ற மெகா திருக்குறள் எழுதும் போட்டி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் விடுமுறை நாட்களை கழித்து வரும் நிலையில் அவர்களது விடுமுறை தினத்தை ஆக்கபூர்வமாகவும் அவர்களது விடுமுறை நாட்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் எலைட் விருதை மலர்ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழக அரசுஅறிவுறுத்தலின் படி திருக்குறல் முற்றோந்தல் நிகழ்வு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தொடும் தூரமே வானம் என்ற தலைப்பில் நடைபெற்ற மெகா திருக்குறள் எழுதும் போட்டியில் விருதுநகரில் செயல்பட்டு வரும் 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு மெகா திருக்குறள் எழுதும் போட்டியில் பங்கேற்று போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. மாஃபா க. பாண்டியராஜன் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி பின்னர் பேசுகையில் தமிழக அரசின் சார்பாக வருடம் தோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் 1330 ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு 25 ஆயிரம்ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறதுஇவற்றை ஊக்குவிக்கும் முகமாகவும்மாணவர்களுக்கு தன்னம்பிக்கை திருக்குறளினால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாகவும் இப்போட்டி விருதுநகர் எலக்ட்ரோட்டரி சங்கம் மற்றும் விருதை மலர் சார்பாக இன்று நடத்தப்பட்டது முழுவதும் பள்ளி விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் செல்போன்களில் மூழ்கிக் கிடப்பதை தவிர்த்து வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளும் கொட்டிக் கிடக்கும் திருக்குறளை மனப்பாடம் செய்து எழுதுவதன் மூலம் அவர்களது அறிவு விரிவடைவதோடு சமுதாயத்திற்கும் நல்ல மாணவ மாணவியர்கள் உருவாகுவதை அடிப்படையாக வைத்து நிகழ்வு நடைபெறுவதாகவும் .இது போன்ற நிகழ்வு இனிவரும் காலங்களில் வருடம் தோறும் மேலும் சிறப்பான முறையில் நடைபெறும் எனவும் கூறினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் ரோட்டரி எலைட் சங்க தலைவர் திரு.B.ராமசாமி, மற்றும் செயலாளர் திரு. SVMR. மதன் மற்றும் விருதை மலர் மகேஷ்வரன் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story