வாலாஜாவில் தன்வந்திரி பீடத்தில் திருமஞ்சன திருவிழா

வாலாஜாவில் தன்வந்திரி பீடத்தில் திருமஞ்சன திருவிழா

திருமஞ்சன திருவிழா

வாலாஜாவில் உள்ள தன்வந்திரி பீடத்தில் திருமஞ்சன திருவிழா ஜூன் மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைய, வெயில் கால நோய்களில் இருந்து காத்துக் கொள்ள, மழை, மண்வளம் வேண்டி, அம்மை நோய் மற்றும் நேத்ர உபாதைகள் வராமல் இருக்க, புயல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழாமல் இருக்க, சுப காரிய தடைகள் விலகவும்,

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்று வரும் ஐந்து நிலை ராஜகோபுர திருப்பணி, சிறப்பாக அமையவும், ஜன ஆகர்ஷ்ணம், தன ஆகர்ஷ்ணம் வேண்டுதல் உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக 9 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும், மருத்துவ கடவுளும், நோய் தீர்க்கும் பெருமாளுமான, ஆரோக்ய லட்சுமி சமேத தன்வந்திரி பகவானுக்கு திருமஞ்சன விழா தொடங்கியது. இந்த விழா வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி வரை 30 நாட்கள், தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி,

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை வேண்டி திருமஞ்சனத் திருவிழா நடைபெறுகிறது. இந்த விசேஷ திருமஞ்சனத்தில் தீர்த்த பரிமளங்கள், வெட்டிவேர், விளாங்குச்சிவேர், இளநீர், பால், பன்னீர், சந்தனம், நெல்லிப்பொடி, கதம்பப்பொடி, கஸ்தூரி மஞ்சள், பஞ்சாமிர்தம், திரிமதுரம், பஞ்சகவ்யம், ஏலக்காய்பொடி மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் தினசரி காலை 10 மணிக்கு கடுக்காய், ஜாதிக்காய்,

சீந்தல்கொடி, வலம்புரி, இடம்புரி, போன்ற மூலிகை திரவியங்கள் கொண்டு, சுதர்சன தன்வந்திரி ஹோமங்களுடன் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story