விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சன பூஜை
விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சன பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபி ஷேகம் நடந்து 2 ஆண்டுகள் முடிவுபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து 7 மணி அளவில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சன பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு மலர் அலங்காரத்தில் வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
Next Story