பழமையான லெட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமஞ்சனம்

பழமையான லெட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமஞ்சனம்
சிறப்பு பூஜை 
முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான லெட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் அருகே முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேதவீரபாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.

தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த மாநில இந்த ஆலயங்களில் திருப்பணி செய்தவற்காக மாவட்ட அளவிலான கமிட்டி கூட்டத்தில் அனுமதி பெற்று, மாநில அளவிலான கமிட்டி அனுமதிக்கு சென்று ள்ளது.

இதற்கிடையில் திருப்பணி தொடர்ந்து கும்பாபிசேகம் நடைபெறவேண்டி லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சிறப்பு சுவாதி திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து கோஷ்டி பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபன் சுவாமி, வெங்கடேஷ்வாமி, சேகர் சுவாமி, நம்மாழ்வார் சுவாமி, சுவாமிநாதன், செல்லப்பா, முருகன், தச்சநல்லூர் ஆண்டாள் கோஷ்டிகள், கே.டி.சி நகர் சோமசுந்தரம், சென்னை விஸ்வநாத ஸ்வாமி சுவாமிகள் உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

திருப்பணி கும்பாபிசேகம் வேண்டி மாதந்தோறும் இந்த கோயிலில் சுவாதி திருமஞ்சனம், பிரதோஷம் ஆகியவை சிறப்பாக நடந்து வருகிறது.

Tags

Next Story