திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம்

திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம்
ஒன்றியக்குழு கூட்டம் 
திருமருகலில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு கூட்டம் நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜகோபால்,வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

.கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது :- ஆரூர் மணிவண்ணன் திமுக :ஒன்றிய பொது நிதியிலிருந்து 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணிகள் செய்தால் மன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

சுல்தான் ஆரிப் திமுக: -வடகரை ஆண்டிப்பந்தல் சாலையில் திருப்பனையூர் ரயில்வே கேட்டில் சுரங்க பாதையில் போதிய வடிகால் வசதி இல்லாமல் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனால் பொதுமக்கள் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே வடிக்கால் வசதி ஏற்படுத்த வேண்டும்,வடகரை திருப்பனையூர் சாலையில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து உள்ளது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இளஞ்செழியன் திமுக :-தமிழக அரசு சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க தயார் நிலையில் இருப்பதால் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் சேதம் அடைந்த பள்ளி கட்டிடங்களை கணக்கெடுத்து உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அதேபோல் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அதற்கு ஆணையர் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினர்.கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள்,ஒன்றியக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் நன்றி கூறினார்.

Tags

Next Story