திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்

திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்

நாதை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.


நாதை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.

நாதை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கோட்டூர், வடகரை, தென்கரை, ஏனங்குடி உள்ளிட்ட 4- கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நேற்று நடைபெற்றது.முகாமிற்கு நாகை தாசில்தார் ராஜா தலைமை தாங்கினார்.வருவாய் ஆய்வாளர் ரம்யா, கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் பெரும்பாலான மனுக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி,மயான வசதி, சமுதாய கூடம், ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் லெட்சுமி, ராமகிருஷ்ணன், பூர்ணசந்திரன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் கிராம உதவியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story