திருமருகலில் மண் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

திருமருகலில்  மண் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

மணல் ஏற்றி செல்லும் லாரிகள்

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் மண் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் தூசியால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

நாகை மாவட்டம்திருமருகல் பகுதியில் மண் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் தூசி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதி திருமருகல் பகுதியில் மண் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் தூசிகளால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

மண் ஏற்றுச்செல்லும் வாகனங்கள் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் எண்ணை சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு 620 ஏக்கர் என பனங்குடியை சுற்றி 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆலை விரிவாக்க பணிகளுக்காக உத்தமசோழபுரம் மற்றும் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகில் மண் குவாரிகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பெரிய லாரிகளில் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் வேலை நடக்கும் இடங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது தார்ப்பாய் கொண்டு மூடாமலும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் குவித்தும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் சாலைகளில் மண் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், குவித்து வைக்கப்பட்ட மண் துகள்கள்,தூசிகள் காற்றிற்கு பறந்து சென்று பின்னால் வரும் வாகன ஓட்டிகளை நிலை தடுமாற வைக்கின்றது.இதனால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. பூதங்குடி, நரிமணம், உத்தமசோழபுரம் பகுதி மக்கள் நாகூர் செல்லும் போதும் மண்களும்,தூசிகளும் பறக்கின்றன.இதனால் சாலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ரோட்டோர உணவகங்கள், டீக்கடைகளில் திறந்த நிலையில் உள்ள உணவுப் பொருட்கள் மீது மண் துகள்கள் படுகின்றன.இதனை சாப்பிடுவர்களும் உடல் நலக்கோளாறுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.எனவே, வாகனங்களில் திறந்த நிலையில் மண் கொண்டு செல்வதை தவிர்த்து பாதுகாப்பான முறையில் தார்ப்பாய் போட்டு மூடியும், வாகனங்கள் செல்லும் சாலையில் காலை மாலை வேலைகளில் தண்ணீர் தெளித்து தூசிகள் பறக்காமல் இருக்கவும் மாவட்ட அரசு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags

Next Story