திருமாவளவன் சஸ்பெண்ட் - விசிகவினர் சாலை மறியல்
சாலை மறியல்
அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பிக்கள், மற்றும் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்களை ஒன்றிய அரசு சஸ்பென்ட் செய்தது.இந்த நிலையில் நேற்று அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை சஸ்பென்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து அதனை கண்டித்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர். இரத்தினவேல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் திருமாவளவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் கண்டனம் முழக்கமிட்டனர் .மேலும் அதனைத் தொடர்ந்து திடீரென அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இந்த சாலை மறியில் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் வீரசெங்கோலன்,மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் உதயகுமார்,ஒன்றிய செயலாளர்களான நந்தன்,இடிமுழக்கம், வரதராஜன்,மனோகரன்,இளமாறன், பாஸ்கர்,பிச்சப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.