திருநெடுங்களநாதா் ஸம்வஸ்தரா அபிஷேக விழா

X
திருநெடுங்களநாதா் ஸம்வஸ்தரா அபிஷேக விழா
திருச்சி அருகே உள்ள திருநெடுங்களநாதா் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு ஸம்வஸ்தரா அபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான ஒப்பில்லா நாயகி உடனுறை திருநெடுங்களநாதா் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில், 10ஆம் ஆண்டு ஸம்வஸ்தரா அபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியவாகனம், கலச பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் யாக வேள்வியுடன் ஸம்வஸ்தரா அபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியா், திரு நெடுங்கநாதா் மங்களாம்பிகை மற்றும் உற்சவ பஞ்சமூா்த்திகள், நால்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை, மூலவருக்கு கலச பூஜை, 108 சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மேலும், பஞ்ச மூா்த்திகள், நால்வா், சேக்கிழாா் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில், திருநெடுங்குளத்தை சுற்றி உள்ள கிராமங்களை சோ்ந்த ஏராளமான சிவ பக்தா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Next Story
