ராணிப்பேட்டையில் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருநீற்றுப்புதன் விழா
ராணிப்பேட்டையில் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருநீற்றுப்புதன் விழா
ராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருநீற்று புதன் விழா - திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஜெப வழிபாடு செய்தனர். உலகம் முழுவதும் இன்று திரளான கிறிஸ்தவர்கள் திருநீற்று புதனை அனுசரித்து நெற்றியில் குருவானவர் திருநீற்றைப்பூசி மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் திரும்பவும் மண்ணிற்கே செல்வாய் ஆசிர்வதிப்பார்கள்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்று புதனிலிருந்து 46-ஆம் நாளாக இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். இந்த 46 நாள் தவக்காலங்களில் 16 வயதுக்குள் இருப்பவர்கள் சுத்த போசனமும் 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் ஒரு சந்தியும் அனுசரிக்க வேண்டும்.
மேலும் இந்த சாம்பல் புதன் அன்று அருட்தந்தை லியோ மரியா ஜோசப் தலைமை தாங்கிமனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என ஒவ்வொரு கிறிஸ்தவர்கள் நெற்றியிலும் திருநீற்றை பூசி அப்பம் மற்றும் ஜெப மாலைகளை அணிவித்து சிறப்பு ஜெபத்தை மேற்கொண்டு ஆசீர்வதித்தார்..