நெல்லை : புதிய மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு..!
நெல்லையில் புதிய மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
நெல்லை மாநகராட்சியின் 30வது ஆணையாளராக தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ், ஈரோடு மாநகராட்சியின் ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த புதிய ஆணையாளருக்கு அதிகாரிகள் புத்தகம் மற்றும் சால்வை அணிந்து வரவேற்பு அளித்தனர்.பின்னர் நெல்லை மாநகராட்சியின் 30 வது ஆணையாளராக அவர் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.தொடர்ந்து மாநகராட்சியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்து பேசினார்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது கடந்த பருவமழையின் போது நெல்லை மாநகர் பகுதி சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை போல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டிட பணி நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் இடையூறு தடுப்பதற்கும் தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story