திமுக அரசுக்கு எதிராக வீதிவீதியாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தும் அதிமுக

திமுக அரசுக்கு எதிராக வீதிவீதியாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தும் அதிமுக
திமுக அரசை கண்டித்து அதிமுக தெருமுனை கூட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு என அதிமுக குற்றச்சாட்டு

திருப்போரூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசை அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக எதிராக அதிமுக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவளம் ஊராட்சி, செம்மஞ்சேரிகுப்பத்தில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது. இதற்கு அப்பகுதியின் ஒன்றிய செயலர் குமரவேல் தலைமை தாங்கினார். கோவளம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் யாஸ்மின் முன்னிலை வகித்தார்.

பிரச்சார கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர் காவேரி கண்டன உரையாற்றினார். கூட்டத்தில், திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, விலைவாசி உயர்வு, போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தவறியதை கண்டித்து பேசப்பட்டது.

Tags

Next Story