திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் தூர்வாரப்படுமா?

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் தூர்வாரப்படுமா?

கோயில் நிலம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் தூர்வாரப்படுமா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத் துறை தவளவெண்ணகை உடனுறை பாலைவனநாதர் திருக்கோவில் குளம் தூர்வாரப்படவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பாலைத்துறை பாலைவனநாதர் தவளவெண்ணகையால் சமேத பாலைவனநாதர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். திருநாவுக்கரசர் பாலைவனநாதரை பற்றி 11 தேவார பாடல்களை பாடியுள்ளார். தேவார பாடலில் இது 19-வது திருத்தல மாகும். 4 இந்த கோவில் யுகங்களாக இருந்து வரும் கோவில். 4 யுகங்களுக்கும் உரிய கதைகள் உள்ளன. சிவனே ஒரு புலி கடிக்க வருகிறது.

அந்த புலியை கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொள்கிறார். இந்த கதை திருப்பாலைத்துறை பாலை வனநாதர் கோவிலில் நடந்துள்ளது. கிருதாயுகத்தில் திரிபுரசுந்தரியாக காட்சி அளித்தது. அனைத்து துன்பங்களையும் போக்குகிறாள். இதே சக்திதான் அம்பாள் தவள வெண்ணகையாக அருள்சக்தி கொண்டு சிவ பெருமான் கங்கை நீரை கொண்டு வேள்வி குண்டத்தில் வெப்பத்தை தணிக்கிறாள். அந்த வேள்வி குண்டமே இன்று திருக்குளமாக விளங்குகிறது. துரேதூயுகத்தில் வசிஷ்ட முனிவர் கங்கை கரையில் கடுந்தவம் செய்கிறார். பாபநாசம் திருப் பாலைத்துறை குளத்திலிருந்து மண்ணெடுத்து லிங்கம் செய்து அரச மரத்தடியில் வைத்து பூசிக்கிறாள். அதன்பிறகு தான் வசிஷ்டருக்கு பிரம்ம இருடு என்ற மாபெரும் பட்டம் கிடைக்கிறது.

சிவலிங்கத்தின் வலது பக்கத்தில் அம்மனை நிறுவி வழிபட்டபோது உலகம் முழுவதும் திடீரென நிலவு ஒளி வீசுகிறது. இதனால் இங்குள்ள அம்மனுக்கு தளவவெண்ணகை அம்மன் என்ற பெயர் ஏற்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவில் குளம் செடி, கொடிகள், புதர்போல் மண்டி கிடக்கிறது. குளத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே, சம்பந்தபட்ட துறையினர் திருக்கோவில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செடி,கொடிகள் மண்டிகிடப்பதையும் முழுமையாக தூர்வார வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story