திருப்பூர் : மாட்டிறைச்சி கடைகளை அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு..!
திருப்பூரில் மாட்டிறைச்சி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவிதா உள்ளிட்ட மூன்று நபர்கள் 18 ஆண்டுகளாக மாட்டிறைச்சி கடை நடத்தி வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ள இந்தக் கடைக்கு மாற்றாக ஆதிதிராவிடர் நலத்துறையில் தாட்கோ நிதியுதவியுடன் நிரந்தர வணிக கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் நேற்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மாநகராட்சி நிர்வாகத்தினர் காவல்துறை துணையுடன் கடைகளை அப்புறப்படுத்தி வேன் மூலம் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் . தற்போது பண்டிகை காலம் என்பதால் அதே பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும், ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களோடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி , ஆதித்தமிழர் பேரவை , ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story