மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை சென்ற திருப்பூர் துப்புரவு பணியாளர்கள்

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை சென்ற திருப்பூர் துப்புரவு பணியாளர்கள்

மிக்ஜாம் புயல் பணிகளுக்காக சென்னை செல்லும் துப்பரவு ஊழியர்கள் 

மிக்ஜாம்புயல் பணிக்காக திருப்பூர் மாநகராட்சி துப்புரவுபணியாளர்கள் சென்னை விரைந்தனர்.

மிக்ஜாம் புயல் பணிக்காக திருப்பூரில் இருந்து சென்னைக்கு 150 துப்புரவு பணியாளர்கள் விரைந்தனர். மேயர் தினேஷ்குமார் வழியனுப்பி வைத்தார். மிக்ஜாம் புயல் பணிக்காக திருப்பூரில் இருந்து சென்னைக்கு 150 துப்புரவு பணியாளர்கள் சென்றனர்.

இவர்களை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வழியனுப்பி வைத்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. குடியிருப்பு பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து இருந்தது.

இந்த நிலையில் புயல் கரையை கடந்த நிலையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் நேற்று மாலை 3 அரசு பஸ்களில் தளவாட பொருட்களுடன் சென்றனர். அவர்களை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வழியனுப்பி வைத்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர் நல அதிகாரி கௌரி சரவணன், மாநகராட்சி கவுன்சிலரும், சுகாதாரக்குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது திருப்பூர் மாநகராட்சியில் இருந்து முதற்கட்டமாக மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு துப்புரவு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் என 150 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தளவாட பொருட்களுடன் தான் செல்கிறார்கள். சென்னைக்கு சென்றதும் அங்கு துப்புரவு பணி மேற்கொள்வார்கள். அங்கு பணிகளை முடித்து விட்டு தான் திருப்பூருக்கு திரும்புவார்கள். தேவைப்படும் பட்சத்தில் இன்னும் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

Tags

Next Story