திருத்தணி முருகன் கோவிலில் குரங்கு பிடிக்கும் பணி மும்முரம்

திருத்தணி முருகன் கோவிலில் குரங்கு பிடிக்கும் பணி மும்முரம்

திருத்தணி வனச்சரகர் தலைமையில் வன ஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து, 20க்கும் மேற்பட்ட குரங்குகளை நேற்று பிடித்தனர். 

திருத்தணி வனச்சரகர் தலைமையில் வன ஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து, 20க்கும் மேற்பட்ட குரங்குகளை நேற்று பிடித்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருத்தணி முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்தது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்துச் செல்வதும், பக்தர்கள் கையில் கொண்டு வரும் பார்சல்களை குரங்குகள் திடீரென பாய்ந்து பறித்தும் செல்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் தொடர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவிலில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறைனரிடம் கோவில் அதிகாரிகள் கோரினர். திருத்தணி வனச்சரகர் தலைமையில் வன ஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து, 20க்கும் மேற்பட்ட குரங்குகளை நேற்று பிடித்தனர். பிடிபட்ட குரங்குகளை ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story