திருத்தணி: வெறும் 22 நாளில் ரூ.1.4 கோடி வரவு

திருத்தணி: வெறும் 22 நாளில் ரூ.1.4 கோடி வரவு

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 22 நாட்களில், 1 கோடியே 04 லட்சத்து 1 ஆயிரம் 973 ரூபாய் ரொக்கம் மற்றும் 382 கிராம் தங்கம், 6 கிலோ 715 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியாத கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்வதுண்டு.

மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி உள்ளனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் கடந்த 22 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ 1கோடியே 04 லட்சத்து 1 ஆயிரம் 973 ரூபாயும், தங்கம் 382 கிராமும், வெள்ளி 6 கிலோ 715 கிராமும் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

Tags

Next Story