திருவையாறு : ரூ.1. 84 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருவையாறு : ரூ.1. 84 கோடி மதிப்பில்  நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவையாறு அருகே கருப்பூர் ஊராட்சியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 108  பயனாளிகளுக்கு, ரூ.1 கோடியே 84 லட்சம் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கருப்பூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

இம்முகாமில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து 300 மதிப்பில் 25 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.29.47 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் வங்கி பெருங்கடன் கடன் நேரடி கடன் சமுதாய முதலீட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சத்து 37 ஆயிரத்து 1 மதிப்பில் 7 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்து வித விவசாயப் பயன்பாட்டு பொருள்கள் ரூ.10 ஆயிரத்து 710 மதிப்பில் 17 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் அனைத்து விவசாய பயன்பாட்டு பொருள்கள் ரூ.20 ஆயிரத்து 600 மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் சார்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் ரூ.20 ஆயிரம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கும், வருவாய் துறை சார்பில் பட்டா மாறுதல் 49 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 84 லட்சத்து 47 ஆயிரத்து 611 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் விழாப் பேருரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவர் கோ.அரசாபஹரன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துகிருஷ்ணன், கல்லணைக் கால்வாய் உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சிவகுமார், ஊராட்சி மன்றத்தலைவர் மதுவிழி, வட்டாட்சியர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story