குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு
குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலகாலமாக நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ்கார்ப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரி நகரப் பகுதிகளில் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ்கார்ப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகு பக்தர்களை கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கன்னியாகுமரி ரயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரை பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் காப்பு போடப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீஷ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகுமூலம் கடல் வழியாகவும், கடலோர பாதுகாப்பு குழும சோதனை சாவடிகளிலும் இரவு பகலாக தீவிர சோதனை நடைபெறுகிறது.

குறிப்பாக குமரி லாட்ஜுகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்றும் போலீசார் விசாரணை அதிரடி சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

Tags

Next Story