நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் வழிபாடு

திருவனந்தல் வழிபாடு 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் கார்த்திகை திருவனந்தல் வழிபாடு இன்று துவங்கி வரும் மார்கழி ஒன்றாம் தேதி வரை நடைபெறும். வழக்கமாக பிற சிவாலயங்களில் மார்கழி மாதம் தொடங்கும் நாளிலிருந்து திருப்பள்ளியெழுச்சி பூஜையானது அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நடைபெறும். ஆனால் நெல்லையப்பர் திருக்கோவிலில் ரிஷிகள் வழிபாடு நடத்துவதாக ஐதீகம். அதன்படி ரிஷிகளின் பகல் மாதமான கார்த்திகை மாத பிறப்பு முதல் மார்கழி மாதம் வரை திருப்பள்ளி எழுச்சி பூஜைகளுக்கு பதிலாக கார்த்திகை திருவனந்தல் வழிபாடு நெல்லையப்பர் கோவிலில் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி மாத பிறப்பான இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக சுவாமி நெல்லையப்பர் தங்கப்பள்ளத்தில் அம்பாள் சன்னதி பள்ளிக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நேற்று இரவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாத திருவனந்தல் வழிபாட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தங்க பல்லக்கில் சுவாமி நெல்லையப்பர் எழுந்தருள பஞ்ச வாத்திய மேளதாளங்கள் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு உள் சுற்று வீதி வழியாக சுவாமி நெல்லையப்பர் வந்தடைந்தார் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இந்த நிகழ்வில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியின் போது தேவார,திருவாசக பாடல்கள் பாடி சிறப்பு பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டது.

Tags

Next Story