தி.மலை இந்தியாவிலேயே முதலிடம்:எம்பி பெருமிதம்
மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன் ஒ.ஜோதி மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் சீ.பார்வதிசீனுவாசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் சையது சுலைமான், ஊரக வளர்ச்சிதுறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் ,மாவட்ட தாட்கோ மேலாளர் ஏழுமலை ,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன் ,வேளாண் இணை இயக்குநர் அரக்குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, அய்யாகண்ணு, பரிமளா கலையரசன், தமயந்தி ஏழுமலை, அன்பரசி ராஜசேகரன், நகராட்சி ஆணையாளர் ந.தட்சிணாமூர்த்தி ,திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மெ.பிரித்திவிராஜன் ,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) எஸ். அருணாசலம் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அனைத்துதுறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ராஷ்டிரியகிரிஷி விகாஷ் யோஜனா, சாயல் எல்த் கார்டு திட்டம்.. வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான இயக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலத்துறை சார்பிலான நலத்திட்டங்கள், தேசிய நலச்சங்கம், தாட்கோ, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பார்த இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம் பிரதம மந்திரி முன்னோடி கிராம வளர்ச்சி திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் பாராளுமன்ற உறுப்பினரின் மாதிரி கிராம திட்டம் தேசிய நில ஆவண மேலாண்மை திட்டம், மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி சமக்ரா சிஷா- சதிட்டம் பிரதான் மந்திர் களிச் ஷேத்ரா கல்யாண் யோஜனா, மாவட்ட மின் ஆளுமை சங்கம் மாவட்ட தொழில் மையம் தேசிய சமூக நல திட்டம் தேசிய நெடுஞ்சாலை துறை உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறை பெண்களுக்கான ஒருங்கிணைந் சேவை மையம், தேசிய வேளாண் சந்தை உள்ளிட்ட 27 துறைகளின் மூலம் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அதற்கு அனைத்துதுறை அதிகாரிகளும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் நிலுவையிலுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக பதிலளித்தனர். இதில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டத்தின் தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்பி பேசுகையில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை கூட்டம் நடத்தியதில் திருவண்ணாமலை மாவட்டம் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக தெரிவித்த அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்க ளிலும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய மாநில அரசு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார். முடிவில் கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் நன்றி கூறினார்.