திருவண்ணாமலை கோமுட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம்!

திருவண்ணாமலை கோமுட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம்!

திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கோமுட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.


திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கோமுட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கோமுட்டி குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சுவாமி வீதியுலாவாக சக்கரதீர்த்தம் என்கிற கோமுட்டி குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நீராட்டு உற்சவம் நடைபெற்றது. விழாவில் கோயில் அர்ச்சகர்கள், உபயதாரர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story