திருவண்ணாமலை: மகளிர் சுயஉதவிக்குழு விற்பனைப் பொருட்கள் கண்காட்சி- அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

திருவண்ணாமலை: மகளிர் சுயஉதவிக்குழு விற்பனைப் பொருட்கள் கண்காட்சி- அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருவண்ணாமலை வட்டாரம் போளுர் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்களை கொண்ட மாபெரும் விற்பனை கண்காட்சி அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடிகளை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர், பூமாலை வணிகவளாகத்தில் உள்ள விற்பனை அங்காடிகளை அமைச்சர் பார்வையிட்டார். இக்கண்காட்சி அடுத்துவரும் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள், கைவினைப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆயத்த ஆடைகள், உணவு பொருட்கள், இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும்.

தீபத்திருவிழா காணவரும் பக்தர்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு மகளிர் குழு உற்பத்தி பொருட்களை வாங்கி அவர்களது முயற்சியை ஊக்கப்படுத்துமாறு அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்.எல்.ஏ மு.பெ.கிரி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story