திருவண்ணாமலை : மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் புலவர்கள் தின விழா
திருவண்ணாமலையில் புலவர்கள் தினவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் புலவர்கள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையில் இயங்கி வரும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் இன்று புலவர்கள் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் R. அனிதா ராம் குருபூசை செய்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நம் தாய் மொழியாம் தமிழை நேசிக்கவும் சுவாசிக்கவும் பயிற்சி அளிக்கும் விதமாக சங்கப் புலவர்கள் மற்றும் இடைக்கால புலவர்கள் குறித்த நிகழ்ச்சியாக அமைந்தது. குழந்தைகள் அனைவரும் மிகவும் அருமையாகவும் அழகாகவும் புலவர்களைப் போல் வேடம் அணிந்து வந்து கண்களுக்கும் கருத்துக்கும் அளப்பரிய விருந்தினை அளித்து மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியானது இன்றைய தலைமுறையினருக்குத் தமிழ் மொழி பற்றிய விழிப்புணர்வு அளிக்கும் விதமாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் அமைய எங்கள் பள்ளியின் ஒரு புதிய முயற்சியாகக் கருதுகிறோம். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் வில்லுப்பாட்டு, திருவிளையாடல்-நாடகம் எனத் தங்கள் சிறப்பு செயல்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழத்தினர். இச்சிறுவயதில் அனைத்து நன்னெறிகளையும் குழந்தைகளின் மனதில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கலாம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இறுதியாக பள்ளியின் முதல்வர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ மாணவியரைப் பாராட்டி வாழ்த்தினார். குழந்தைகள் அனைவரும் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உடையவர்களாக வளர வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.
Next Story