திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா !

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா !

 ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

புதுகை திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
புதுகை திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 25ம் தேதி தடந்தது. விழாவையொட்டி புதுகை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு செலுத்தப்பட் டது. அதிகாலையில் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்து வந்தும், மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து மாசிப்பெருந்திருவிழா நேற்றிரவு காப்பு கட்டுதல் மற்றும் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில், செயல் அலுவலர் முத்துராமன், மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் ஊர் நாட்டார்கள், மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக உற்சவர் மாரியம்மன் மேளதாளத்துடன் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருவப்பூர் கோயிலுக்கு வந்தது. பின்னர் காப்புக்கட்டி, கொடியேற்றப்பட்டதும் காட்டு மாரியம்மன் கோயிலை சென்றடைந்தது.

Tags

Next Story