திருவட்டார் ஆஞ்சநேயசுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்
குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது ஆஞ்சநேய சுவாமி கோவில். இங்கு 108 அடி உயரத்தில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக கடந்த பிப்பிரவரி மாதம் கோவில் புனரமைக்கும் வேலைகள் மற்றும் சிலை அமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் இருந்து ஆஞ்சநேய சித்தர் தலைமையில் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் புஷ்பாஞ்சலி சுவாமிகள் முன்னிலையில் பக்தர்கள் சிவன், நந்தி சிலையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர்.
தொடர்ந்து ஆல வளாகத்தில் சிறப்பு பூஜைகள், திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆஞ்சநேய சுவாமி கோவில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பிருந்தா ஸ்ரீகுமார், செயலாளர் டாக்டர் ஸ்ரீகுமார், பொருளாளர் அஷ்வந்த் ஸ்ரீகுமார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.