திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் இரவில் மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு 

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் இரவில் மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு 

ஆறாட்டு

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட்டுக்கு எழுந்தருளினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனித்திருவிழா கடந்த 12.ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பத்தாம் திருவிழா நாளான நேற்று (21-ம் தேதி) மாலை கோவில் தந்திரி கோகுல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரவில் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம் ஆற்றுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளினர்.

கோவிலில் இருந்து சுவாமி விக்கிரகங்கள் கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் புடை சூழ வந்த போது திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி முன்செல்ல, கிருஷ்ணர் வேடமணிந்த கதகளி கலைஞருடன் சிங்காரி மேளம், வாத்தியத்திங்கள் முழங்க தாலப்பொலியுடன் கோயிலில் இருந்து சுவாமி பவனி நடந்தது. ஆற்றூர், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக மூவாற்றுமுகம் ஆற்றிற்கு சுவாமி விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆதிகேசவப்பெருமாள், கிருஷ்ணசாமி விக்கிரகங்களை அர்ச்சகர்கள் எடுத்துச்சென்று மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு நடத்தினர். பின்னர் பூஜைகளுக்குப்பின்னர் கருடவாகனத்தில் சுவாமி சிலைகள் கோவிலுக்கு திரும்பி வந்தபோது வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் செய்திருந்தனர்.

Tags

Next Story