திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசம்

திருவாவடுதுறை ஆதீனம் பட்டணப்பிரவேசம்

பட்டணப்பிரவேசம் 

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பட்டணப்பிரவேச விழாவில் 10 விரல்களில் வைர மோதிரங்கள், தங்கப் பாதரட்சை அணிந்து, 24வது சன்னிதானம் சிவிகை பல்லக்கில் பட்டணப்பிரவேசம் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14-ஆம் நூற்றாண்டில் ஆதீன குரு முதல்வர் ஶ்ரீநமச்சிவாய மூர்த்திகளால் தோற்றுவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் தை அசுபதி தினத்தில் நமச்சிவாய மூர்த்திகள் மகர தலைநாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டு பக்தர்கள் தோளில் பல்லக்கில் சுவாமிகளை தூக்கிச் செல்லும் பட்டணப்பிரவேசம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் விழாகோலம் பூண்டது.

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஒரு லட்சத்து எட்டு ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் 10 விரல்களில் வைர மோதிரங்கள் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சென்றார். யானை செல்ல ஆடும் குதிரைகள் ஆட்டத்துடன், வானவேடிக்கை முழங்க 50 நாதஸ்வரம் தவில்வித்வான்களின் மங்கள வாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் பல்லக்கினை சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பட்டணப்பிரவேசம் நடைபெற்றது.

வழியெங்கும்; பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு திருவாவடுதுறை ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story