திருவிடைமதூர் : கிராமத்திற்குள் வந்த முதலையால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கடமங்குடி கிராமத்தில் களத்தடி மேட்டு தெருவை சேர்ந்த காந்திராஜ் என்பவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு செல்வதற்காக வந்துள்ளார். அப்போது தனது வீட்டின் பின்புறம் முதலை இருப்பதைக் கண்டு அஞ்சி கூச்சலிட்டு மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே அவர் வனத்துறையினருக்கும், வருவாய் துறையினர்க்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், மகாராஜபுரம் ஊராட்சி எழுத்தர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் வனவர் சண்முகம் தலைமையில் வனகாவலர்கள் துளசி ராமன், அருமைதுரை ஆகியோர் காந்திராஜா வீட்டு பின்புறம் இருந்த 3 அடி முதலையை கயிறு மூலம் கட்டி வேன் மூலம் பாதுகாப்பாக எடுத்து சென்று அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனர். கடமங்குடிக்கு வந்த முதலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.