திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தளமாக போற்றப்படும் பிரகத்சுந்தர குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கும் தனி தனி சன்னதி கொண்டுள்ள ஒரே தலமாக விளங்கும் மகாலிங்க சுவாமி கோயிலில் கடந்த 13 ஆம் தேதி வைகாசி விசாகப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் நிறைவாக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காருண்யாமிர்த தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். திருவாவடுதுறை ஆதீனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். நான்கு கரைகளிலும் ஏராளமான பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் வலம் வரும் சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தீர்த்த குளத்தில் 11 முறை சுவாமி அம்பாள் தெப்பத்தில் வலம் வந்தார்.

Tags

Next Story