அரங்கநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் சுவாமி, தாயாருக்கு கூடாரவல்லி உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாமக்கல் ஆன்மீக இந்து சமயப் பேரவையின், திருப்பாவை, திருவெம்பாவைக் குழு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் 27-ஆம் நாள் அரங்கநாதா் கோயிலில் சுவாமிக்கும், ரங்கநாயகி தாயாருக்கும் கூடாரவல்லி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் அரங்கநாதா் கோயில் மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளாக காட்சியளித்த சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாா் பல்வேறு வகை மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், அரங்கநாதா் கோயில் படிக்கட்டுகளில் பெண்கள் ஏராளமானோா் பங்கேற்ற சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதன்பிறகு பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பாவைக் குழுவினா் செய்திருந்தனா்.

Tags

Next Story