திருச்சுழி அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

விருதுநகர் மாவட்டம்,திருச்சுழியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சுழியில் உள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் மாசிப் பொங்கல் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இக்கோவில் திருவிழா கடந்த வாரம் வியாழன் அன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது . இதனையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீமாரியம்மன் காலையும், இரவும் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று மாசிப்பொங்கல் திருவிழா நடைபெறுவதை ஒட்டி இன்று 1008 திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் மாரியம்மன் விளையாட்டு மன்றம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்தத் திருவிளக்கு பூஜையில் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story