இது வாரிசு அரசியல் இல்லை:விஜய பிரபாகரகன்

இது வாரிசு அரசியல் இல்லை:விஜய பிரபாகரகன்
வாக்கு சேகரித்த விஜயபிரபாகரன்
தேமுதிக கட்சி தொய்வான நிலையில் இருக்கும் போது நான் அரசியலில் வந்திருப்பதாகவும் , இது வாரிசு அரசியல் இல்லை என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சி சார்பாக விருதுநகர் தொகுதியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் இன்று அம்மன் கோவில் திடலில் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமிய தொப்பி அணிந்து துவா செய்தார். தேர்தல் வந்துவிட்டால்,

விருதுநகர் தொகுதி விருதுநகர் மாவட்டம் அனைத்து கட்சியினராலும் கூர்ந்து கவனிக்கப்படுவதாகவும் உங்களை நம்பி நான் வந்துவிட்டதாகவும் பொதுமக்கள் சிந்தித்து இந்த முறை அனைத்து வாக்கையும் முரசு தினத்திற்கு அழிக்க வேண்டும் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளவர்கள் ஜாதியை பற்றியோ மதத்தைப் பற்றியோ, மொழியை பற்றியோ பேச மாட்டார்கள் மக்கள் உணர்வை மட்டுமே பேசுவார்கள் இதைத்தான்,

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அதிமுக கட்சியின் தலைவராக இருந்து சொல்லிக் கொடுத்ததாகவும் தற்போது உள்ள காலகட்டத்தில் குல்லா அணிந்தால் ஒரு அரசியல் பொட்டு வைத்தால் வேறு ஒரு அரசியல் என இருப்பதாகவும் ஆனால் கேப்டன் அதை சொல்லித் தரவில்லை எனவும் பொங்கல் என்றால் பொங்கல் சாப்பிடுவேன் இஸ்லாமியர்கள் தரும் பிரியாணியையும் சாப்பிடுவோம் கிறிஸ்தவர்கள் தரும் கேக்கையும் சாப்பிடுவோம் எனக்கு எந்த வேறுபாடும் இல்லை உங்களுக்காக உழைக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் பேசியவர் இளைஞர்கள் தனது பெற்றோர்கள் மீது கோபப்பட வேண்டாம் அவர்களை திட்ட வேண்டாம் பெற்றோர்கள் இருக்கும் பொழுது அவர்கள் மீதான அருமை தெரியாது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக தேர்தலில் நிற்ப்பதாகவும் நான் இங்கு வந்து நிற்பதற்கு காரணம் வாரிசு அரசியல் என சிலர் விமர்சிப்பதாகவும் எனது தாத்தா ஆறு முறை முதல்வர் தந்தை மேயராக இருந்து துணை முதல்வராக இருந்தார் எனவே நான் வாரிசு அரசியல் பண்ணவில்லை தேமுதிக கட்சியில் ஒரு எம்எல்ஏ ,ஒரு எம்பி கூட இல்லாத தொய்வான காலகட்டத்தில் தைரியமாக கட்சியினரின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக அரசியலில் இறங்கி இருப்பதாகவும்,

இது வாரிசு அரசியல் இல்லை எனவும் கூறினார் தான் படைபலம் பண பலம் கொண்டு அரசியலுக்கு வரவில்லை மக்களை நம்பி தனது தந்தை வந்தார் அதேபோல் மக்களை நம்பி விஜய் பிரபாகரன் நான் வந்துள்ளேன் நீங்கள் தான் என்னை காப்பாற்ற வேண்டும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நான்காம் நம்பர் பட்டனை அழுத்தி உங்கள் வாக்கை செலுத்த வேண்டும் நான்காம் நம்பர் பட்டனில் குத்தி உங்கள் வாழ்க்கை செலுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையை கெத்தாக பார்த்துக் கொள்வதாகவும் கண்ணாடி மாறி இயங்க வேண்டும் தேர்தல் நடக்கும் பொழுது மக்களாகிய நீங்கள் தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும்,

தேர்தல் நடந்து பின்பு நான் உங்களைப் பார்த்துக் கொள்வேன் ஏப்ரல் 19ஆம் தேதி நாலாம் நம்பரில் உள்ள முரசு சின்னத்தை அமுக்கினால் ஜூன் நான்காம் தேதி முதல் இடத்திற்கு முரசு சின்னம் வர வேண்டும் என்று பேசினார்

Tags

Next Story