நாமக்கல்லில் இருந்து மந்தராலயம்/ திருப்பதி மற்றும் மும்பை செல்ல இந்த ரயில் இருக்கு

நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மந்தராலயம்/ திருப்பதி மற்றும் மும்பை செல்ல இந்த ரயில் உள்ளது.
நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து மந்தராலயம்/ திருப்பதி மற்றும் மும்பை செல்ல இந்த ரயில் உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.. நாமக்கல்லில் இருந்து இன்று (பிப்ரவரி 20) செவ்வாய்க்கிழமை மதியம் 2:40 மணிக்கு திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், திருப்பதி, அனந்தபூர், குண்டக்கல், சுவாமி ராகவேந்திரா மடம்(மந்த்ராலயம் ரோடு), ராய்சூர், வாடி, ஹைதரபாத், குல்பர்கா, சோலாப்பூர், புனே, மும்பை செல்ல டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் வழியாக வாரத்தில் 4 நாட்கள்(திங்கள்,செவ்வாய், புதன், வெள்ளி) மும்பை csmt செல்லும் 16340 நாகர்கோவில் - மும்பை csmt விரைவு ரயிலில் மதியம் 2:40 க்கு நாமக்கலில் இருந்து திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், பகலா, மதனபள்ளி ரோடு, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், ராய்சூர், வாடி, குல்பர்கா, மந்தராலயம் (சுவாமி ராகவேந்திரா மடம்), சோலாப்பூர், புனே, தானே, மும்பை பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட் இருப்பு உள்ளது. இதனை பயன்படுத்தி முன்பதிவு செய்து குறைந்த நேரத்திலும், குறைந்த கட்டணத்திலும் பாதுகாப்பாக பயணிக்கலாம். தேவைப்படுவோர் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளவும். திருப்பதி செல்ல இணைப்பு ரயில் வசதி: இந்த ரயில் மூலம் மதியம் 2:40 மணிக்கு நாமக்கல்லில் புறப்பட்டு பகாலாவில் இரவு 9:15 மணிக்கு இறங்கி, அங்கிருந்து இரவு 9:55 மணிக்கு 16870 திருப்பதி முன்பதிவில்லா ரயில் மூலம் திருப்பதிக்கு எளிதாக செல்லலாம். இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து திருப்பதிக்கு நேரடி ரயில் இல்லாத நாட்களில் இந்த ரயிலை பயன்படுத்தி எளிதில் செல்லலாம் நாமக்கல்லில் இருந்து மும்பை வரை செல்ல டிக்கெட் கட்டண விவரம் படுக்கை வசதி - 620/- 3 அடுக்கு AC படுக்கை - 1655/- 2 அடுக்கு AC படுக்கை - 2390/- நாமக்கல்லில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல அதிக டிக்கெட்கள் எளிதில் கிடைக்கும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story