தாமஸ் ஆல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின விழா

தாமஸ் ஆல்வா எடிசன், ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின விழா

 கோபி காந்தி

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் தாமஸ் ஆல்வா எடிசன்,ஆபிரகாம் லிங்கன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் உலக புகழ்பெற்ற விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், உலக புகழ்பெற்ற அரசியல்வாதி ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி பேசியதாவது, தாமஸ் ஆல்வா எடிசனை சிறு வயதில் மூளை வளர்ச்சியற்றவர் என்று ஆசிரியர் பள்ளியை விட்டு விரட்டினார். ஆனால் தன்னுடைய அளவற்ற அறிவால் இன்று உலகம் இயங்கி கொண்டிருக்கிற அத்தனை பொருட்களையும் கண்டுபிடித்து உலக புகழ்பெற்ற விஞ்ஞானியாக சாதனை படைத்து காட்டினார்.

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு இன்றும் நம்பிக்கையின் நாயகனாக வழிகாட்டியாக இருப்பவர் தாமஸ் ஆல்வா எடிசன் உலகம் உள்ள அளவிற்கு அவரது கண்டுபிடிப்பின் மூலமாக வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆபிரகாம் லிங்கன் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாக பிறந்து பெரிய கல்வியையும் கற்காமல் வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தவர் தன்னம்பிக்கையால் ஒரு நாட்டுக்கே ஜனாதிபதியாக உயர்ந்து புகழ்பெற்ற அரசியல் தலைவராக சாதித்து காட்டினார். உலகம் முழுவதும் உள்ள அரசியவாதிகள் ஆபிரகாம் லிங்கனை முன்மாதிரியாக எடுத்து கொண்டு வாழ வேண்டும் என சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட இயக்குனர், நடிகர் கோபி காந்தி இவ்வாறு பேசினார். விழாவில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story