மழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் : மேயர் ஜெகன்
மேயர் ஆய்வு
கனமழையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகரத்தில் ஏற்கனவே பக்கிள் ஓடை இருந்தாலும் புதிய வழித்தடங்களான மீன்வளக் கல்லூரி முதல் புறவழிச் சாலை வரை, சங்கரப்பேரி விலக்கில் இருந்து ஓடை வரை, பெல் ஹோட்டல் முன்பு, சவேரியாணா அருகில், ஸ்டேட் பாங்க் காலனி முதல் திரேஸ்புரம் வரை, செல்சீனி காலனியில் இருந்து அன்னம்மாள் கல்லூரி வழியாகவும், கருணாநிதி நகர் இனைக்கும் சாலை, முத்து நகர் கடற்கரை வழியாக என தற்பொழுது புதிய வடிகால் பணிகள் நிறைவுற்றுள்ளன. ஆகவே மாநகர மக்கள் எந்தவித ஐயமும் கொள்ள வேண்டாம் என்றும் மாநகராட்சி நிர்வாகமானது தயார் நிலையில் இருக்கின்றது என்று தெரிவித்தார்.
Next Story