மாநகராட்சி பணிகள் - நன்றி தெரிவித்த மேயர்

மாநகராட்சி பணிகள் - நன்றி தெரிவித்த மேயர்

மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிகளை சிறப்புற செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

மேயர் ஜெகன் பெரியசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தமிழினத்தின் தலைவர் டாக்டர்.கலைஞர் மற்றும் எனது தந்தையார் என்.பெரியசாமி ஆகியோர் நல்லாசியுடனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும் தூத்துக்குடி மாநகர மேயராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். தூத்துக்குடி மாநகரைப் பொறுத்தவரை பல்வேறு சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது மேலும் பல்வேறு பகுதிகளில் வடிகால் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.

இந்தப் பணிகளின் இடையே பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான மின் கோபுரங்களும், பிரதான சாலைகளின் சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே பாளையங்கோட்டை சாலையின் நடுவிலே வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டது போல சுமார் 500 மின் கம்பங்களில் வரும் நாட்களில் எட்டையாபுரம் ரோடு புதிய பேருந்து நிலையம் முதல் ஜோதி நகர் விலக்கு வரை, ஜெயராஜ் ரோடு, தெற்கு காவல் நிலையம் முதல் காமராஜர் கல்லூரி வரை உள்ள சாலை, மற்றும் முத்தையாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சென்டர் மீடியன்களில் அமைக்கப்படும்.

முத்து நகர் கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான மீடியா டவர் ஒன்றும் அமையப் பெற உள்ளது. இது போன்ற பணிகளினால் மாநகரமானது ஒளிமிகு அழகான நகரமாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதுபோன்ற சீரிய பணிகளை சிறப்புற செய்வதற்கு என்னாலும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மாநகர மக்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், பத்திரிக்கை துறையினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story