வெயில் காலம் தொடங்கியதால் கண் பரிசோதனை முகாம்
கண் பரிசோதனை முகாம்
தமிழ்நாடு மின்வாரியம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சுன்னத் வல் ஜமாத் இளைஞர்கள், முத்து உதவும் கரங்கள், அர்ரஹ்மானியா நற்செவை மன்றம் ஆகியவை இணைந்து தூத்துக்குடி தெற்கு புது தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாபெரும் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு மின்வாரிய ஆனந்த் ராமானுஜம் தலைமை தாங்கினார் தனபால் ராஜசேகர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் பொருளாளர் மூஸா வரவேற்று பேசினார். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழீம், இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு துவா ஓதினர். இந்த முகாமை ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், ஜாமியா பள்ளிவாசல் துணைத்தலைவர் சிராஜ் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இதில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கண் நோய்கள் அறிகுறிகள் குறித்து அவர்களுக்கு விளக்கினர். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தற்போது வெயில் காலம் தொடங்கியதால் கண் நோய் ஏற்படும் என்பதற்காக பொதுமக்கள் தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்வதற்காக இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் தெரிவித்தார். இந்த முகாம் ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாத் இளைஞர்கள், முத்து உதவும் கரங்கள், அர்ரஹ்மானியா நற்செவை மன்றம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.