திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் மரணம் - கோட்டாட்சியர் விசாரணை

திருமணமான மூன்றே மாதத்தில் இளம்பெண் மரணம் - கோட்டாட்சியர் விசாரணை

இளம்பெண் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்

இளம்பெண் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை

திருச்செந்தூரில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள பள்ளிப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது மனைவி கவிதா (19), இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி திருமணம் நடந்தது. கவிதா தற்போது பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி (பொ) மாயவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணான 3 மாதங்களில் அவர் இறந்ததால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story