கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - 4பேர் கைது

கடைகளின் பூட்டை உடைத்து  திருட்டு - 4பேர் கைது

கைது 

தூத்துக்குடியில் கடைகளின் பூட்டை உடைத்து லேப்டாப், ஸ்பீக்கர் மற்றும் பணத்தை திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஆசிரியர் காாலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் மகன் கிறிஸ்டோபர் (50). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த 20ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.20,500 பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

மேலும், அதே நாள் இரவில் தூத்துக்குடி ராஜூவ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜெயகனேஷ் மகன் ஹரிஸ் குமார் (20) என்பவர் நடத்தி வரும் பால்கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அங்கிருந்த லேப்டாப், மற்றும் ஸ்பீக்கரை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.

போலீசாரின் விசாரணையில், தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மகேஷ் (23), பிரையண்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த சிவகுமார் மகன் இன்பராஜ் என்ற இசக்கி (21), வள்ளி நாயகபுரத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் மாரிசெல்வம் (19), தர்மலிங்கம் மகன் காமராஜ் (23) ஆகிய 4பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4பேரை கைது செய்து லேப்டாப், ஸ்பீக்கரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story