நிதி நிறுவனங்களில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

நிதி நிறுவனங்களில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என குமரி பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.


நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என குமரி பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு அருகே உள்ள நாகராஜபுரம் பகுதியை சேரன சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் ஸ்ரீ தேஜா மாயானந்தா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என ராதாகிருஷ்ணன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சந்திரபாபு என்பவர் ரூ 8 லட்சத்து 3 ஆயிரத்து 463 முதலீடு செய்துள்ளார். ஆனால் ராதாகிருஷ்ணன் நிதி நிறுவனத்தை மூடி விட்டு தலைமுறையாகி விட்டார். இதனால் சந்திரபாபு நாகர்கோவில் பொருளாதார குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். இது ஒரு பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கூறியதாவது:- ஸ்ரீ தேஜா மாயானந்தா பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் எவரேனும் புகார் மனு கொடுக்க தவறி இருந்தால் அசல் பாஸ்புக், மற்றும் புகார் மனுவுடன் நாகர்கோவில் பொருளாதார குற்ற பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Tags

Next Story