கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

பெரம்பலூர் அருகே பாடாலூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட செட்டிக்குளம் கிராமத்தில் 25 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி வந்தவர்களை பிடித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆலம்பாடி சாலையை சேர்ந்த கமல் வயது 30 மற்றும் பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் (28) ஆகிய இருவரையும் *குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும், போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story