சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கட்டாயம் பதிவு செய்யணும் !

சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கட்டாயம் பதிவு செய்யணும் !

தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுலா தொழில் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையின் https://www.tntourismtors.com என்ற லிங்கில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் "சுற்றுலா வழிகாட்டிகள் (Tour Guides), சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள் (Tour Agents), சுற்றுலா முகவர்கள் (Travel Agents) மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் (Tourist Transport Operators)" நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்பவர்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளமான https://www.tntourismtors.com ல் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தர்மபுரி சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8939896398 / 04342-230705 மற்றும் மின் அஞ்சல் முகவரி: touristoffice.dpi@gmail.com உள்ளிடவற்றின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.

Tags

Next Story