காவலர்களை திட்டிய நபர்கள் சிறையில் அடைப்பு

பைல் படம்

கடத்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை ஆபாச வார்த்தையில் திட்டிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் நூலகம் அருகே காவல் உதவி ஆய்வாளர் சண்முகம், செளந்தர்ராஜன் மற்றும் காவலர்கள் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில், பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சிங்கார வேலு , பழனி மகன் விஜய் ஆகியோர் கையில் கட்டையுடன், ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களிடம் காவலர்கள் விசாரித்தபோது, தகாதவார்த்தையில் காவலர்களை திட்டியுள்ளனர். இதையடுத்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக, சிங்காரவேலு, விஜய் ஆகிய இருவரையும் கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் பாப்பிரெட் டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் சிறையில் அடைத்தனர்.
Next Story


