தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி

தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி

திமுக பொதுக்கூட்டம் 

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 மட்டுமல்ல, தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த தி.மு.க.,வின் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு, இந்தியாவை வெல்வதற்கு மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் 40க்கு 40 மட்டுமல்ல, 40 தொகுதிகளிலும் தி.மு.க.,வை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி. கடந்த லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி., கவுதமசிகாமணியின் கோரிக்கை ஏற்று, கள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லுாரி அமைக்கப்பட்டது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்ன அத்தனை விஷயங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மகளிர் உரிமை திட்டம், விடியல் பேருந்து பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவின் உரிமைகளை மீட்டெடுக்க, இந்தியாவில் பாசிசத்தை வீழ்த்த இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வதற்கு உழைத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story