சுத்தமல்லியில் இரண்டு ஆடுகளை திருடியவர்கள் கைது
கோப்பு படம்
சுத்தமல்லியில் இரண்டு ஆடுகளை திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாநகர சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் காசிசெல்வம் (வயது 42). இவர் வீட்டில் வளர்த்து வந்த 2 ஆடுகள் திருடு போனது.
இதுகுறித்து காசி செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் சுத்தமல்லி உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நரசிங்கநல்லூர் மாரியப்பன் (24) மற்றும் ஒரு இளைஞர் ஆகிய இருவரை நேற்று (ஜூன் 17 ) கைது செய்தார்.
Next Story