சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க விருப்புவோர் விண்ணப்பிக்கலாம்

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க விருப்புவோர் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் 

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா மூலம் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், Preloom, Post Loom மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, Design தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம். கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 30.03.2024-க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story