விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்பினர்

விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்பினர்

சேலம் அரசு மருத்துவமனை

விஷ சாராயம் குடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் சிகிச்சைக்காக இதுவரை மொத்தம் 52 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி நேற்று வரை 22 பலியாகி உள்ளனர்.

மற்றவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே சிகிச்சை பெற்றவர்களில் 12 பேர் குணமாகி விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். இதனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து மற்ற 18 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு டாக்டர்கள் சில அறிவுரைகள் வழங்கினர். அதாவது இனிமேல் மது, சாராயம் குடிக்க கூடாது என்றும், போதைப்பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் கூறினர்.

Tags

Next Story